Publish Date: Fri, 08 Feb 2008 (15:08 IST)
Updated Date: Fri, 08 Feb 2008 (15:07 IST)
மணிப்பூரில் கடந்த 2 நாட்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள கோயாதொங் நகரத்தில் 2 தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதே மாவட்டத்தில் உள்ள சாமுரு பகுதியில் 2 தீவிரவாதிகளை காவல் துறையினர் சுட்டுக் கொன்றதுடன், கைத் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளைக் கைப்பற்றினர்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தம்பால்கோங் பகுதியில் மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைக் காவலாளி ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அதே பகுதியில் நடந்த மேலும் 2 சம்பவங்களில் ஆயுதங்களைக் காட்டி மக்களை மிரட்டிய 2 தீவிரவாதிகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.