Publish Date: Thu, 07 Feb 2008 (17:31 IST)
Updated Date: Thu, 07 Feb 2008 (17:31 IST)
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்யா குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சானியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
சமீபத்தில் சானியா, தேவையில்லாமல் எழும் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக ஒரு வருடத்துக்கு இந்தியாவில் நடக்கும் எந்த டென்னிஸ் போட்டியிலும் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலை இன்று சந்திப்பதாக இருந்த திட்டம் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.