இந்திய மீனவர்களை கேடயமாகப் பயன்படுத்தி தங்களை விடுதலைப் புலிகள் தாக்கினர் என்று சிறிலங்கக் கடற்படையினர் தெரிவித்த புகார் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நெடுந்தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சுமார் 400 இந்திய மீனவர்களைக் கேடயமாக வைத்துத் தங்களை விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், அப்போது தங்களின் இயந்திர பீரங்கிப் படகு ஒன்று 7 கடற்படையினருடன் மாயமானதாகவும் சிறிலங்கக் கடற்படை குற்றம்சாற்றியது.
இது குறித்து சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தற்போது இந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிஷோர் குமார் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.