ஓசோன் படலத்தை பாதிக்கும் தடை செய்யப்பட்ட வாயுக்களை இறக்குமதி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ரூ.60 லட்சம் மதிப்புடைய ஓசான் படலத்தை பாதிக்கும் வாயுக்களை மற்ற பொருட்களுடன் கலந்து சட்டவிரோதமாக கொண்டு வந்துள்ளார்.
போலி பெயர்களில், அவருக்கு தெரிந்தவர்களின் பெயர்களில் மேலும் இரண்டு நிறுவனங்களை துவக்கி வர்த்தகம் புரிந்து வந்ததும் வருவாய் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரைணயில் தெரியவந்தது. எல்.ஜி. சிறிய குளிர்சாதன பெட்டிகள், வேக்குவம் பம்புகள், கம்ரஷர் ஆயில் போன்றவற்றை இவர் இறக்குமதி செய்து வந்துள்ளார். அவற்றுடன் ஓசான்படலத்தை பாதிக்கும் வாயுக்கள் நிரப்பப்பட்ட 13 கிலோ மற்றும் 22 கிலோ சிலிண்டர்களையும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்துள்ளார்.
தடை செய்யப்பட்ட வாயு சிலிண்டர்கள் மற்றும் இதர பொருட்கள் அடங்கிய மூன்று பெட்டிகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். 2003ம் ஆண்டிலும் இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் இந்த நபர் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1962-ம் ஆண்டு சுங்கவரிச் சட்டம் மற்றும் இறக்குமதி ஏற்றுமதி கொள்கையின் கீழ் இத்தகைய வாயுக்கள் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.