Newsworld News National 0802 05 1080205033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான‌ம் கட‌த்‌திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

Advertiesment
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் ஆயுள் தண்டனை
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:30 IST)
கந்தகாரவிமாகடத்தலதொடர்பாகைதசெய்யப்பட்ட 3 பேருக்கஆயுளதண்டனவழங்கி பாட்டியாலநீதிமன்றமஇன்றதீர்ப்பளித்தது.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி 189 பேரை ஏற்றிக்கொண்டு காட்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி-814 விமானத்தை போலி பாஸ்போர்ட்டில் பயணித்த தீவிரவாத கும்பல் கடத்தியது. பாகிஸ்தானின் லாகூரில் எரிபொருள் நிரப்பிய பிறகு, க‌ந்தகாருக்கு கடத்தி சென்றனர்.

ஒருவாரகாலமாக விமானத்தை சிறைபிடித்த கும்பல், ஜெய்சி-ஈ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசார், அகமது ஜர்கர், ஷேக் அகமது ஒமர் சயத் ஆகிய மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்த பிறகே, விமானத்தை விடுவித்தது. எனினும், புதியதாக திருமணமான ருபன் கத்யால் (25) என்பவர் கொல்லப்பட்டார்.

இந்த விமான கடத்தல் சம்பவம் தொடர்பாக 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அப்துலலதிப், தலிப் குமார், யுசுப் நேபாலி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து 120 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

Share this Story:

Follow Webdunia tamil