18 -வது புதுடெல்லி பன்னாட்டு புத்தக கண்காட்சியை நாளை டெல்லியில் அமைச்சர் அர்ஜூன் சிங் தொடங்கி வைக்கின்றார்.
ஒன்பது நாட்கள் நடைப்பெறும் இந்த கண்காட்சியில் சர்வதேச உரிமைகள் தொடர்பான பணிகள் மற்றும் அதற்காக மகாத்மா காந்தி ஆற்றியுள்ள பணிகள் தொடர்பான சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், இளைஞர்களுக்கு என்று தனித்தனியான அரங்குகள் இடம் பெற்றுள்ளது.
இக்கண்காட்சியில் ரஷ்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த புத்தக கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளராக ரஷ்யா கலந்து சொள்கிறது. இந்தியா ஹேபிடேட் மையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு தேசிய புத்தக அறக்கட்டளையும், பிரஃங்பட் புத்தக கண்காட்சி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.