பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் சில்லரை விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பான முடிவு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் மீதான சில்லரை விலையை உயர்த்துவது தொடர்பாக டெல்லியில் இன்று நடைப்பெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததைத் தொடர்ந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைப்பது எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.