இந்தியா நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 6 பெரிய ஹெர்குலிஸ் சி-130 ஜே இரக போக்குவரத்து விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது.
ஹெர்குலிஸ் சி-130 ஜே இரக விமானங்கள் எல்லா கால நிலைகளிலும், இரவு நேரங்களிலும் பறக்க கூடியது. இந்த விமானங்கள் இராணுவ வீரர்களை விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துசெல்ல உதவும். இந்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு கடந்த வாரம் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அனுமதியளித்துள்ளது.
அடுத்த மாதம் அமெரிக்க இராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த விமான விற்பனை, அரசுகளுக்கு இடையேயான அயல் இராணுவவிற்பனைத் திட்டத்தின் கீழ் வாங்கப்படுவதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஹெர்குலிஸ் சி-130 ஜே இரக விமானங்களை அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் தயாரிக்கின்றது. இந்த விமானங்களில் ஏவுகணை எச்சரிக்கை தொழில்நுட்பம், ரேடார் எச்சரிக்கை தகவல்களைப் பெறும் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.