கடந்த உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் மதக் கலவரத்தைத் தூண்டும் தகவல்கள் அடங்கிய குறுந்தகடுகளை வினியோகித்த வழக்கில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குறுந்தகடுகளில் மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலான தகவல்கள் இருந்ததாகக் குற்றம் சாற்றப்பட்டதன் அடிப்படையில், அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் லால்ஜி டாண்டன் உள்ளிட்ட 10 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடரப்பட்ட இவ்வழக்கின் விசாரணை தற்போது முடிந்ததைத் தொடர்ந்து, மாநில அரசின் ஒப்புதலுக்குப் பிறகு காவல் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனால், பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.