Publish Date: Tue, 29 Jan 2008 (11:26 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (11:26 IST)
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் மத்தியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில், 2008- 09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 29 ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் முதல் பகுதியை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரையும், இரண்டாம் பகுதியை ஏப்ரல் மாதம் மத்தியில் தொடங்கி மே மாதம் மத்தி வரையும் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Webdunia
Publish Date: Tue, 29 Jan 2008 (11:26 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (11:26 IST)