Publish Date: Thu, 24 Jan 2008 (19:08 IST)
Updated Date: Thu, 24 Jan 2008 (19:05 IST)
பிரதமர் மன்மோகன் சிங், தான் அண்மையில் மேற்கொண்ட சீனப் பயணத்தின் முக்கிய அம்சங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க உள்ளார்.
மக்களவையில் அடுத்த மாதத் துவக்கத்தில் நடக்கவுள்ள நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின்போது பிரதமரின் உரை இடம்பெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக இன்று நடந்த வாராந்திர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தனது பயணத்தின் முக்கிய அம்சங்களை தனது சக அமைச்சர்களிடம் விளக்கியுள்ளார்.