அந்தமான் தீவுகள் அருகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது.
லிட்டில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஹெலிகாப்டரில் இருந்த 4 பைலட்டுகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், அந்தமான் கடற்படைச் செய்தித் தொடர்பாளர் அக்ஷய் ஜெய்ன் தெரிவித்தார்.
இவ்விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.