Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

22 ‌சிறுவ‌ர்களு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது!

22 ‌சிறுவ‌ர்களு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது!
, சனி, 19 ஜனவரி 2008 (14:30 IST)
இந்த ஆண்டின் வீரதீரச் செயலுக்கான தேசிய விருதுக்கு 18 ‌சிறுவ‌ர்க‌், 4 ‌சிறு‌மிக‌‌உ‌ட்பட 22 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இ‌தி‌ல் 4 பே‌ரமரண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ‌விருதுகளை‌பபெறு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

விருதபெறுவோ‌ரி‌ல் ச‌ட்டீ‌ஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் யுக்தார்த் ஸ்ரீவாஸ்த்தவா என்ற சிறுவனும் அடங்குவான்.

இச்சிறுவன் தமது 11 மாதத் தங்கையை தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளான். பெண் குழந்தையை தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறின. அவற்றை விரட்ட முற்பட்டான். ஆனால், நாய்கள் அவனைத் தாக்கிக் காயப்படுத்தின. அதையும் பொருட்படுத்தாது தங்கையைக் காப்பாற்றினான் ஸ்ரீவாஸ்த்தவா.

குழ‌ந்தை‌த் ‌திருமண‌த்‌தி‌லஇருந்து தப்பிய சிறுமி:

13 வயதாகும் தம்மைக் குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றிக் கொண்ட கன்வர் என்ற சிறுமியும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"குடும்பப் பாரம்பரியப்படி 13 வயதாகும் போதே தனது 3 சகோதரிகளைப் போல் தனக்கும் பால்ய விவாகம் செய்து வைக்க பெற்றோர் 2006-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி நிச்சயம் செய்தனர். ஆனால், திருமணத்துக்கு முதல் நாள் நண்பர்களும், உறவினர்களும் விருந்து உண்ணும்போது காவ‌லதுறை‌‌யினரதொலைபே‌சி‌யி‌லஅழை‌த்தஉடனடியாக வந்து என்னைக் காப்பாற்றுமாறு கதறினேன். இதையறிந்த எனது தந்தையும் உறவினர்களும் விருந்து முடிந்ததும் என்னை அடித்து தனி அறையில் வைத்துப் பூட்டினர்.

என்னுடைய ஆசிரியர் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பேசி என்னைத் தொடர்ந்து படிக்க வைக்குமாறு கூறியதையடுத்து, பூட்டிய அறையில் இருந்து நான் விடுதலை பெற்றேன்' என்று கன்வர் கூறினார்.

"குழ‌ந்தை‌யிலேயே ‌திருமண‌மசெய்து கொண்ட எனது 3 சகோதரிகளின் கதியை நேரில் பார்த்த பிறகு எனக்கும் அந்த கதி நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்றும் கன்வர் கூறினார்.

கொலையாளியிடம் இருந்து தப்பித்த சிறுமி:

வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடிக்கும்போது தனது பாட்டியையும் தம்பியையும் கொலை செய்த வீட்டு வேலைக்காரரிடம் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்ட உத்தரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த மெஹர் லேகா என்ற சிறுமியும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீரில் மூழ்கி பலர் தவித்த போது அவர்களைக் காப்பாற்றிய பபிதா (17), அமர்ஜீத் (15) ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரதீரச் செயலுக்கான விருது பெறும் சிறுவர்களை பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய குழந்தைகள் நலக் குழு ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு தேர்வு செய்தது.

இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படும் சிறுவர்களுக்கு அவர்களது பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை ஆகும் அனைத்து செலவுகளையும் தேசிய குழந்தைகள் நலக் கவுன்சில் ஏற்றுக் கொள்ளும்.

Share this Story:

Follow Webdunia tamil