மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்திய மூன்று மாவு மில்களுக்கு பி.எஸ்.இ.எஸ். நிறுவனம் ரூ.1.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மின்சக்தி துறைகள் தனியார்மயமாக்கப்பட்டதை அடுத்து இத்துறை கடந்த 2002ம் ஆண்டு பி.எஸ்.இ.எஸ்., யமுனா பவர் லிமிடெட், பி.எஸ்.இ.எஸ்., ராஜ்தானி பவர் லிமிடெட் வசம் வந்தது.
இந்நிலையில், அதிகமான மாவு மில்கள் மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வருவதாக சமீபத்திய நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. அதன்படி, பி.எஸ்.இ.எஸ்., ராஜ்தானி பவர் லிமிடெட் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில மில்கள் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் நஜப்கர் பகுதிகளை சேர்ந்த எம்.கே., எஸ்.கே., எஸ்.ஜி., ஆகிய மூன்று பிரபல மாவு மில்கள் 73 கிலோ வாட்ஸ் முதல் 85 கிலோ வாட்ஸ் வரையில் மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த மில்கள் மொத்தம் 232 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை திருடியதை அடுத்து, ரூ.1.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய தானியங்கி மீட்டர் உதவியால் இந்த மின்திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.