குற்றவியல் வழக்குகளில் இருதரப்பிலும் சட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் செய்துக் கொண்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் நடைப்பெறும் குற்ற நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு , வழக்கு விசாரணை ஆகியவற்றுக்கு பெரிதும் உதவும். அதிலும் குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுக்கவும், அது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவும்.
சுவிட்சர்லாந்த், துருக்கி, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 35 நாடுகளுடன் இது போன்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.