கொல்கட்டாவின் மையப்பகுதியில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் காயமடைந்தனர்.
கொல்கட்டாவின் பிரதான தியேட்டர் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் லீவர், நாகாலாந்து ஹவுஸ் கட்டடத்தின் அடிப்பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், கட்டடத்தின் கண்ணாடி சாமான்கள் சில்லு, சில்லாக உடைந்து நொறுங்கியது. இதில் ரோட்டோரத்தில் சென்று கொண்டிருந்த 17 பேர் காயமடைந்தனர்.
"இந்த சம்பவத்திற்கு குண்டு வெடிப்பு காரணமாக இருக்க வாய்ப்பில்லை. மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட குறைந்த மின்அழுத்தம் அல்லது நிலத்திற்கு அடியில் அதிகளவில் இணைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள் வெடித்திருக்கலாம்" என்று புலானாய்வுத்துறை துணை ஆணையர் ஜவேத் ஷமிம் கூறினார்.
காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு கொல்கத்தாவில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.