Publish Date: Wed, 16 Jan 2008 (14:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பேட்டாபூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இளையாஸ் (30), பிரிஜ்பவான் (25), வாகித் (20) ஆகியோர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் புர்மை என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் சுடப்பட்டனர். இதில் பிரிஜ்பவான், வாகித் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
'காயமடைந்த இளையாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் கூறினர்.