Publish Date: Mon, 14 Jan 2008 (19:14 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (19:13 IST)
திரிபுராவில் பிப்ரவரி 23 ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 3 ஆம் தேதியும், நாகாலாந்தில் மார்ச் 5 ஆம் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தலைநகர் டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரிபுராவில் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 6. வேட்புமனுப் பரிசீலனை நாள் பிப்ரவரி 7. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 9.
இங்கு வாக்குப் பதிவு பிப்ரவரி 23 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 7 ஆம் தேதியும் நடக்கும்.
மேகாலயாவில வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 15. வேட்புமனுப் பரிசீலனை நாள் பிப்ரவரி 16. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 18.
இங்கு வாக்குப் பதிவு மார்ச் 3 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 7 ஆம் தேதியும் நடக்கும்.
நாகாலாந்தில் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 16. வேட்புமனுப் பரிசீலனை நாள் பிப்ரவரி 18. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20.
இங்கு வாக்குப் பதிவு மார்ச் 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 8 ஆம் தேதியும் நடக்கும்.
இந்த மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவை தவிர, இந்த ஆண்டில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Mon, 14 Jan 2008 (19:14 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (19:13 IST)