Publish Date: Thu, 10 Jan 2008 (19:38 IST)
Updated Date: Thu, 10 Jan 2008 (19:38 IST)
ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் ரயில்வே நிலங்களை மீட்பதற்கு ஏற்ற வகையில், 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ரயில்வே சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சிறப்பு ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தச் சட்டத் திருத்தம், வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
முன்னதாக, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
Webdunia
Publish Date: Thu, 10 Jan 2008 (19:38 IST)
Updated Date: Thu, 10 Jan 2008 (19:38 IST)