தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் இன்று துவங்குகிறது.
இதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, எஸ்.ஒய். குரேஷி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் கர்நாடகத்துக்கு வருகின்றனர்.
இவர்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியையும் கர்நாடகத்தில் சட்டம், ஒழுங்கு நிலையையும் ஆராய்வர் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு நாட்கள் கர்நாடகத்தில் தங்கியிருக்கும் தேர்தல் அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவர்.
கர்நாடகத்தில் 4.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2.11 கோடி பேர் பெண்கள்.