மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசின் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்த கருத்துக்கள், தெளிவாகப் புரிந்து கொள்ளப்படாத காரணத்தால் திரித்துக் கூறப்பட்டு விட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதலாளித்துவப் பாதையில் தொழில் வளர்ச்சி உருவாவது குறித்து ஜோதிபாசு தெரிவித்த கருத்துகள் தவறானவை அல்ல என்று குறிப்பிட்ட காரத், கூட்டணியில் உள்ள சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட இதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.
''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே, 'கட்சி தனது கொள்கையான சோசியலிசத்தை கைவிட்டு விட்டது. முதலாளித்துவத்தை வரவேற்கத் தொடங்கி விட்டது' என்று பேசுவார்கள்'' என்றார் காரத்.