Publish Date: Mon, 07 Jan 2008 (13:28 IST)
Updated Date: Mon, 07 Jan 2008 (13:28 IST)
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் தவறான தீர்ப்பால் இந்தியா தோல்வியை தழுவியது. நடுவர்களின் இந்த செயல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டபோது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.
இந்தியாவின் புதிய தலைமை கணக்கு ஆணையராக வினோத் ராய் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம், சிட்னிடெஸ்ட் போட்டியில் நடுவர்களின் தவறான தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பிரச்சனை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும், எந்த ஒரு பிரச்சனையிலும் முழு விவரம் தெரியாமல் கருத்து கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றார் பிரதமர்.
இந்த பிரச்சனை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியமும், அதன் தலைவர் சரத் பவாரும் பார்த்து கொள்வார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.