இந்திய அயலுறவுக் கொள்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த இரண்டு நாள் நடைபெறும் கருத்தரங்கம் இன்று புவனேஸ்வரில் துவங்குகிறது.
இக் கருத்தரங்கை புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக் கழகமும், அயலுறவுத் துறையின் பொது உறவுகள் துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இக்கருத்தரங்கை இன்று ஒரிஸ்ஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துவக்கி வைக்கிறார்.
இதில் கல்வி நிபுணர்கள், அறிவு ஜீவிகள், தொழில் துறை வல்லுநர்கள், ஊடகங்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். கிழக்கு நோக்கிய கொள்கை, சர்வதேச பயங்கரவாதம், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, உலக வர்த்தக அமைப்பின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.