Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சத்தீவுகளுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

லட்சத்தீவுகளுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!
, சனி, 5 ஜனவரி 2008 (10:50 IST)
லட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் பயணச் சேவையை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 1-4-2007 முதல் 31-3-2012 வரை ஹெலிகாப்டரை இயக்குவதற்கு‌், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம், ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கவும், இயக்கவும் ஆண்டுதோறும் ரூ.13.10 கோடியை பவன்ஹன்ஸ் நிறுவனத்திற்கு வாடகையாக தரவும் அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிறுவனம் அளித்து வரும் ஹெலிகாப்டர் பயணச் சேவை, அரபிக் கடலில் சிதறிக்கிடக்கும் சிறு தீவுகளை இணைப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. அபாய கட்டத்திலிருக்கும் நோயாளிகளை கவரட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சை அளிக்கவும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil