உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரிலுள்ள மத்திய கூடுதல் காவல் படையின் முகாம் மீது நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு அப்படையினரின் சேம்பலே காரணம் என்று உ.பி. முதலமைச்சர் மாயாவதி குற்றம் சாற்றியுள்ளார்.
மத்திய கூடுதல் காவல் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மாநில அரசிற்குக் கிடைத்த உளவுத் தகவல் உடனடியாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறிய மாயாவதி, அந்த எச்சரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததே பாதுகாப்பு தோல்விக்குக் காரணம் என்று கூறினார்.
ராம்பூர் முகாம் மீது நேற்று அதிகாலை பயங்கருவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ம.கூ.கா.ப. வீரர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமுற்றனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.