அஸ்ஸாமில் திப்ரு சைகோவா என்ற இடத்தில் காட்டிற்குள், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உல்ஃபா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரும் அண்மையில் மியான்மரில் பயிற்சி பெற்றவர்கள் என்றும், அஸ்ஸாமில் பயங்கரத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் ஆகியவை உட்பட 400 வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.