'கர்நாடகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் எங்கள் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்' என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் பிரதமர் வேட்பாளருமான அத்வானி கூறியுள்ளார்.
குஜராத், இமாச்சலப் பிரதேசத்தை அடுத்து கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றால், மக்களவைத் தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும் என்று பா.ஜ.க.நினைக்கிறது
ஆனால், குஜராத், இமாசலப் பிரதேசத்தைப் போல கர்நாடகத்தில் பா.ஜ.க. அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில், குஜராத், இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பாஜகவைத் தவிர மூன்றாவது பெரிய கட்சி ஏதும் இல்லை. ஆனால் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது. எனவே கர்நாடகத்தில் பா.ஜ.க. எளிதில் வெற்றிபெற முடியாது.
கர்நாடகத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமைய வேண்டும்.