Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 ஆவது ஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் க‌ல்‌வி‌க்கு மு‌ன்னு‌ரிமை: ‌பிரதம‌ர்

Advertiesment
11 ஆவது ஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் க‌ல்‌வி‌க்கு மு‌ன்னு‌ரிமை: ‌பிரதம‌ர்
, வெள்ளி, 28 டிசம்பர் 2007 (15:03 IST)
க‌ல்‌வி‌க்கமு‌ன்னு‌ரிமஅ‌ளி‌ப்பத‌னமூல‌மபள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

கோவா மாநில தலைநகர் பனாஜியில் நட‌ந்நிகழ்ச்சியில் அவர் பேசுகை‌யி‌ல், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவோருக்காக அனைவரு‌க்கு‌மக‌ல்‌வி‌த் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்போதும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எனவே, 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைவரு‌க்கு‌மக‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லகல்வித்தரம் உயர்த்தப்படும். அதன்மூலம் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவது கட்டுப்படுத்தப்படும்" எ‌ன்றா‌ர்.

பின்னர், வீடியோ கான்பரன்சிங் வசதி மூலமாக கிராம மக்களுடன் மன்மோகன்சிங் உரையாடினார். அப்போது அவர், 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வித் துறையில் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று‌ கூறினார்.

மேலு‌ம், நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும், ஏழை-பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது கவலை அளி‌ப்பதாகவு‌ம், இந்த வேறுபாட்டை குறைக்க பன்முகம் கொண்ட கொள்கை வகுக்கப்படு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil