பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டிருப்பது இந்திய துணைக் கண்டத்திற்கு உள்ள பொதுவான அச்சுறுத்தலை உணர்த்துகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பெனாசிர் பூட்டோ படுகொலையை கண்டனம் செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த பயங்கரவாத நடவடிக்கை நம்மை எதிர்நோக்கியுள்ள பொதுவான அச்சுறுத்தலை உணர்த்துகிறது என்றும், அந்த அபாயகரமான அச்சுறுத்தலை அழித்தொழிக்க வேண்டிய அவசியத்தை வலிமையாக உணர்த்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பெனாசிரின் படுகொலை பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்ட பெரும் காயம் என்று வர்ணித்துள்ள மன்மோகன் சிங், பெனாசிர் பூட்டோ சாதாரணத் தலைவர் அல்ல என்றும், அவர் வாழ்ந்த காலத்திலும் இந்த அரசியல் வரலாற்றிலும் முத்திரைப் பதித்தவர் என்று புகழ்ந்துரைத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார் என்று பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சாய்யா பாரு கூறியுள்ளார்.