கிழக்கு மராட்டியத்தில் உள்ள விதர்பா பகுதியில் கடன் தொல்லையால் ஒரே நாளில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அகோலா மாவட்டம் டிப்தலா கிராமத்தில் வசிக்கும் சுனில் கொண்ட் ரூ.40,000 கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 35.
மற்ற 3 பேரும் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் வார்வாத் பக்கால் கிராமத்தைச் சேர்ந்த சத்தன் இங்லே(30) என்ற விவசாயி ரூ.15,000 கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விஷம் குடித்து த்றகொலை செய்துகொண்டார்.
சந்துர் பிஸ்வா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பஜோட்(26), ஜேன்ஃபுல் கிராமத்தைச் சேர்ந்த அச்யுத் பச்ரனே(42) ஆகியோரும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விஷம் குடித்தனர்.
தியுல்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிபிப்கான் நுர்ஹான். இவர் ரூ.40,000 கடன் வாங்கியிருந்தார். அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால், தனது மனைவியை அவரின் வீட்டில் ரூ.10,000 வாங்கி வருமாறு அனுப்பியிருந்தார். ஆனால், மனைவி வருவதற்குள் ஹிபிப்கான் நுர்ஹான் தூக்கிட்டுக்கொண்டார்.