Publish Date: Thu, 27 Dec 2007 (12:08 IST)
Updated Date: Thu, 27 Dec 2007 (12:08 IST)
நடப்பாண்டில் ரயில்வே வருவாய் 13.55 விழுக்காடு கூடியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 10 ஆம் தேதிவரையிலான பத்து நாட்களில் ரயில்வேத்துறை ரூ.1931.02 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட ரூ.1700.57 கோடி வருவாயுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் வருவாய் 13.55 விழுக்காடு கூடியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சரக்குப் போக்குவரத்து வாயிலாக கிடைத்த வருவாய் நடப்பாண்டில் மேற்குறிப்பிட்ட பத்து நாட்களில், ரூ.1314.38 கோடியை எட்டியுள்ளது. இது சென்ற ஆண்டு தொகையான ரூ.1189.72 கோடியுடன் ஒப்பிடும்போது 10.48 விழுக்காடு கூடுதலாகும்.
ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதிவரையிலான காலத்தில் ரூ.553.90 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 21.47 விழுக்காடு அதிகமாகும்.
இம்மாதம் ஒன்று முதல் பத்து வரையிலான தேதிகளில், சுமார் 18.7 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்ய பதிவு செய்திருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 7.5 விழுக்காடு அதிகமாகும் என்றும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Webdunia
Publish Date: Thu, 27 Dec 2007 (12:08 IST)
Updated Date: Thu, 27 Dec 2007 (12:08 IST)