Publish Date: Wed, 26 Dec 2007 (18:28 IST)
Updated Date: Wed, 26 Dec 2007 (18:28 IST)
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் வருகிற 30 ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று சிவசேனா அமைப்பு அறிவித்துள்ளது.
புது டெல்லியில் இன்று நடந்த அக்கட்சியின் ஹிந்து சம்மெளனக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, சிவசேனா அமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஹிந்துக்களின் நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் ராமர் பாலத்தில் இருந்து ஒரு கல்லைக் கூட எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.