Publish Date: Mon, 24 Dec 2007 (17:48 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (17:47 IST)
சுற்றுலா தளங்கள் நிறைந்த ஜோர்டானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில், நமது நாட்டிற்கும் ஜோர்டான் அரசுக்கும் இடையில் கடந்த 1989 ஆண்டு அக்டோபர் 16 இல் கையெழுத்தான விமான சேவைகள் ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
ஜோர்டானுக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்குவது தொடர்பாக, ஜோர்டான் அரசுடன் நடந்து வந்த கடைசி கட்டப் பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 16 இல் முடிந்தது.
இந்தப் பேச்சின் இறுதியில், சர்வதேச விமான சேவை விதிகளுக்கு ஏற்ற வகையில் இந்திய -ஜோர்டான் விமான சேவைகள் ஒப்பந்தத்தைத் திருத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.