Publish Date: Mon, 24 Dec 2007 (12:47 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (12:47 IST)
அமெரிக்காவில் லூசியானா பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இந்திய மாணவர்களின் உடல்களும் அவர்களின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கர்நூலுக்கு நேற்று எடுத்து வரப்பட்டன.
அப்போது அவர்களின் உறவினர்கள், இந்நிகழ்வில் மத்திய அரசும் ஆந்திர அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாற்றினர்.
மத்திய மாநில அரசுகள் இன்றுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று கேட்டதுடன், அமெரிக்காவில் நடந்தது என்ன என்று இதுவரை முழுமையாக எதுவும் தெரியவில்லை என்றும் கூறினர்.
லூசியானா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படித்து வந்த இந்திய மாணவர்கள் சந்திரசேகர ரெட்டி, கிரண் குமார் ஆகியோர் கடந்த 13 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் குடியிருப்பு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சந்தேகப்படும் 2 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.