Publish Date: Mon, 24 Dec 2007 (12:46 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (12:45 IST)
தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 12 தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத் முன்பு சரணடைந்தனர்.
தோடா மாவட்டம் ரம்பனில் நடந்த இந்நிகழ்ச்சியில் பேசிய குலாம் நபி ஆசாத், கடந்த 20 ஆண்டுகளாக காஷ்மீரை அச்சுறுத்தி வரும் தீவிரவாதம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.
சரணடைந்த தீவிரவாதிகளிடம் இருந்து பெருமளவிளான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போதைய நிலையில், காஷ்மீரில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கங்களில் மிகப் பெரியது ஹிஸ்புல் முஜாஹிதீன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.