ராமர் பாலத்தைக் காப்பதற்காக போராடி வரும் ஹிந்து அமைப்புகள் எல்லாம் ஒன்றுபட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக போபாலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராமர் பால விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவிட்டால் உரிய விலை கொடுக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்தார்.
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, சமாஜ்வாதி கட்சியுடனோ இடது சாரிகளுடனோ தான் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்றார்.