Publish Date: Mon, 24 Dec 2007 (12:37 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (12:36 IST)
சீனாவுடன் நாம் இணைந்து மேற்கொண்டு வருகிற ராணுவக் கூட்டுப் பயிற்சி நிச்சயமாக இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் என்று நமது ராணுவத் தளபதி கர்னல் புத்வார் கூறியுள்ளார்.
சீனாவின் குன்மிங் நகரத்தில் நடந்து வரும் ராணுவக் கூட்டுப் பயிற்சிமிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பயிற்சியிலும் இருநாட்டு வீரர்களும் இணைந்தே ஈடுபடுகின்றனர் என்றார் புத்வார்.