Publish Date: Mon, 24 Dec 2007 (10:44 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (10:43 IST)
குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நரேந்திர மோடியை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து வரும் 27 -ஆம் தேதி நடைபெறும் விழாவில் அம்மாநிலத்தின் முதல்வராக 3 -வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார்.
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், பொதுச் செயலாளர் அருண் ஜெட்லியும் கலந்து கொள்கின்றனர்.
குஜராத் முதல்வர் பதவிக்கு ஏற்கெனவே நரேந்திர மோடியின் பெயரை பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டை விட இந்த தேர்தலில் பா.ஜ.க. 10 இடங்கள் குறைவாக பெற்றிருந்தாலும் 117 இடங்களைப் பெற்று அருதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
தற்போதைய தேர்தல் வெற்றி மூலம் 3-வது முறையாக மோடி குஜராத் முதல்வராக வரும் 27 ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.