Publish Date: Sun, 23 Dec 2007 (16:28 IST)
Updated Date: Sun, 23 Dec 2007 (16:28 IST)
இந்த வெற்றி குஜராத் மக்களுக்கு கிடைத்த வெற்றி. உலகின் பல மூளையில் வாழும் குஜராத் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மோடி பெற்ற வெற்றியை அடுத்து அவர் வெற்றிப் பேரணியில் உரையாற்றினார்.
அதில், எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கி பாஜகவிற்கு வெற்றியை அளித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி குஜராத் மக்களுக்கே உரியது. அதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்த வெற்றியை நாளை மாலை 5.30 மணியளவில் பெரிய விழா எடுத்துக் கொண்டாடலாம் என்று கூறினார்.
Webdunia
Publish Date: Sun, 23 Dec 2007 (16:28 IST)
Updated Date: Sun, 23 Dec 2007 (16:28 IST)