Publish Date: Fri, 21 Dec 2007 (19:52 IST)
Updated Date: Fri, 21 Dec 2007 (19:52 IST)
உத்தரபிரதேசத்தில் நிலவும் கடுங்குளிருக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து பலியோனார் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலியானவர்கள் 8 பேரும் மெய்ன்புரி, ஜான்பூர், கெளசாம்பி, சான்ட் கபீர்நகர், பிரதாப் கார்க் மற்றும் பெரெலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாநிலத்தில் மிகவும் குறைவான வெப்பநிலை சுல்தான்பூரில் பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கு குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 5.7 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.
அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் வெப்பத்திற்காக தீ வளர்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 21 Dec 2007 (19:52 IST)
Updated Date: Fri, 21 Dec 2007 (19:52 IST)