பாகிஸ்தான் எல்லையில் நமது ராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பீரங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் தவறுதலாக அருகில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு மாவட்டம் கெளர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் ஏவிய இரண்டு ராக்கெட்டுகள் இலக்கைத் தாண்டி, அருகில் சமார்க்கி கிராமத்தில் உள்ள பள்ளியின் வளாகத்தில் விழுந்தன.
பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை என்பதாலும், அதிர்ஷ்டவசமாக ராக்கெட்டுகள் வெடிக்கவில்லை என்பதாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
இதுபற்றித் தகவல் அறிந்ததும் அப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் முன்பு பொதுமக்கள் திரண்டனர். ராணுவத்தினர் தங்கள் பயிற்சிக் களத்தை உடனே மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.