Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌பிர‌வீ‌ன் மகாஜ‌னு‌க்கு ஆயு‌ள் த‌‌ண்டனை: ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

‌‌பிர‌வீ‌ன் மகாஜ‌னு‌க்கு ஆயு‌ள் த‌‌ண்டனை: ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!
, செவ்வாய், 18 டிசம்பர் 2007 (16:17 IST)
பா.ஜ.க. பொது‌ச் செயலாளர் ‌பிரமோ‌த் மகாஜ‌ன் சுட்டுக் கொலை செய்த்தாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அவ‌ரி‌ன் சகோதர‌ர் ‌பிர‌வீ‌ன் மகாஜ‌னுக்கு மு‌ம்பை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆயு‌ள் த‌ண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது குறித்து நடந்த வாதத்தில் பங்கேற்ற அரசு வழ‌க்க‌றிஞ‌ர், ‌பிர‌வீ‌ன் மகாஜனு‌க்கு மரண த‌ண்டனை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வா‌தி‌ட்டா‌ர். இதை எ‌தி‌ர்‌த்து ‌பிர‌வீ‌‌ன் மகாஜ‌‌னி‌ன் வழ‌க்க‌றிஞ‌ர் எடு‌த்து வை‌த்த வாத‌ங்க‌ள் கேட்டுக்கொண்ட நீதிபதி, பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

மு‌ன்னதாக நே‌ற்று, பிர‌வீனு‌க்கு எ‌திராக ‌தி‌ட்ட‌மி‌ட்ட கொலை, கு‌ற்ற‌ச் ச‌‌தி‌ உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கு‌ற்ற‌‌ச்சா‌ற்றுக‌ள் ‌நிரூ‌பி‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், அவரு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ங்க‌ள் ‌இ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றியது.

இ‌ந்த வழ‌க்கு கட‌ந்த 15 ஆ‌ம் தே‌தி ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, ‌பிர‌வீ‌ன் மகாஜ‌ன் ‌பிரமோ‌த்தை‌க் கொலை செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர் எ‌‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றை ‌நீ‌திம‌ன்ற‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ண்டது. ‌

இது ‌தி‌ட்ட‌மி‌ட்ட கொலை எ‌ன்பதை பிரமோ‌த்‌தி‌ற்கு ‌பிர‌வீ‌ன் அனு‌ப்‌பிய எ‌‌ஸ்.எ‌‌ம்.எ‌‌ஸ்.க‌ள் ‌நிரூ‌பி‌க்‌‌கி‌ன்றன எ‌ன்ற வாத‌த்தையு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டது.

கட‌ந்த 2006 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 22 ஆ‌ம் தே‌தி ம‌த்‌திய மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள அடு‌க்குமாடி‌க் குடி‌யிரு‌ப்‌பி‌ல், சொ‌த்து ‌விவகார‌ம் கு‌றி‌த்து நட‌ந்த வா‌க்குவா‌த‌த்‌தி‌ன் இறு‌தி‌யி‌ல், ‌பிரமோ‌த் மகாஜனை ‌பிர‌வீ‌ன் சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டு காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் சரணடை‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌பிரமோ‌த் மகாஜ‌னி‌ன் மனை‌வி ரேகா உ‌ள்பட 30 சா‌ட்‌சிக‌ள் ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். முத‌லி‌ல் கு‌ற்ற‌த்தை ஒ‌ப்பு‌க் கொ‌ண்ட ‌பிர‌வீ‌ன், ‌பி‌ன்ன‌ர் தா‌ன் கொலை செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று மா‌ற்‌றி‌ப் பே‌சினா‌ர்.

பிர‌வீ‌ன் இ‌வ்வாறு முர‌ண்ப‌ட்டு‌ப் பே‌சியதே அவரு‌க்கு எ‌திரான மு‌‌க்‌கிய‌ச் சா‌ட்‌சியாக அமை‌ந்து‌வி‌ட்டது எ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil