Publish Date: Tue, 18 Dec 2007 (11:09 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் பிரதமரின் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையையும் மீறி ஹெலிபேடில் தரையிறங்கிய டெக்கான் ஏவியேஷனின் பைலட்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலம்பூரில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் புறப்படும்போது இந்த நிகழ்வு நடந்தது. அந்த இடத்தில் இருந்த ஹெலிபேடில் ஏற்கனவே மூன்று ஹெலிகாப்டர்கள் மிக முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் செல்வதற்காக நின்றிருந்தன.
அப்போது ஹெலிபேடு ஊழியர்கள் எச்சரித்தும், காங்கிரஸ் பிரமுகர் ஆர்.கே.தவணை அழைத்துச் செல்வதற்காக வந்த டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பைலட்டுகள் வலுக்கட்டாயமாக தரையிறங்கினர்.
மேலும் பிரதமரின் பாதுகாப்புப் படையினருடன் அத்துமீறி நடந்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன், ஹெலிகாப்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.