நந்திகிராமில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுக் கழகத்துக்கு (சி.பி.ஐ.) கூடுதலாக 2 மாதம் அவகாசம் அளித்து கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நந்திகிராம் வழக்கு இன்று நீதிபதி சுமித்ரா பால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை முடிக்க இன்னும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று ம.பு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அதை நிராகரித்த நீதிபதி, பிப்ரவரி 15 ஆம் தேதி விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.