சிறிலங்காவின் விமானப் படையை மேம்படுத்துவது குறித்த நெறிமுறைகளை உருவாக்கித் தரும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று சிறிலங்கா செல்கின்றனர்.
மூன்று நாட்கள் சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இக்குழுவினர், அந்நாட்டு ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து, வான்வெளி பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான விடயங்களில் முக்கியமான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து பல்வேறு ராணுவ உதவிகளை இந்தியா சிறிலங்கவுக்கு வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்தப் பயணமும் கருதப்படுகிறது.
இதற்கிடையில், வான்வெளிப் பாதுகாப்புக்குத் தேவையான பல்வேறு கருவிகளை சிறிலங்காவில் இந்தியா நிறுவியுள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்ததுவதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.