மும்பை புறநகர் ரயில்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை வருகிற 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி 7 புறநகர் ரயில்களில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வுகளில், 186 பேர் கொல்லப்பட்டனர். 800 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் 28 பேர் மீது குற்றம்சாற்றப்பட்டு உள்ளது. இதில் 13 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகிவிட்ட மற்ற 15 பேர் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மும்பையில் உள்ள திட்டமிட்ட சதித் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கவுள்ள இந்த வழக்கின் விசாரணை பல்வேறு காரணங்களால் தாமதமாகி உள்ளது.
குறிப்பாக, நீதிபதி ஒருவரை மாற்ற வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை, மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.