Newsworld News National 0712 14 1071214039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'மன்மோகனுக்கு அரசியல் தெரியாது': அத்வானி கிண்டல்!

Advertiesment
மன்மோகன் அத்வானி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி

Webdunia

, வெள்ளி, 14 டிசம்பர் 2007 (17:28 IST)
பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, "பிரதமருக்கு அரசியல் தெரியாது பாவம். அரசியல் தெரிந்தவர்கள் இதுபோன்ற கருத்துகளைக் கூற மாட்டார்கள்" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவையொட்டி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அத்வானி, அகமதாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குஜராத்தில் நரேந்திர மோடியை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்காக பிரதமரை நான் பாராட்டுகிறேன்' என்றார்.

நரேந்திர மோடியைக் கண்டு பயப்படுவதால்தான் அத்வானியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil