பஞ்சாபில் சுர்சக் கிராமத்தில் உள்ள ஆளில்லாத ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறிய பேருந்து மீது பயணிகள் ரயில் மோதியதில் பேருந்தில் வந்த 8 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
ரயில் வருவதை அறியாமல் பேருந்தின் ஓட்டுநர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக லூதியானாவில் இருந்து பெரோஸ்புர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், பேருந்து மீது மோதியது.
இதில் அந்த பேருந்து சுக்குநூறாக நொறுங்கியது. பேருந்தில் வந்த 8 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.