ஓய்வுபெற்ற ராணுவத்தினர் மருத்துவ உதவித் திட்டத்தை, இனி கடலோரக் காவல்படையினரும், ராணுவப் பாதுகாப்புப் படையினரும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
புதுடெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இத்தகவலைத் தெரிவித்தார்.
''விரிவுபடுத்தப்பட்டு உள்ள புதிய திட்டத்தின் மூலம் பணியிலிருக்கும் ஓய்வுபெற்ற கடலோரக் காவல்படையினர், ஓய்வு பெற்ற ராணுவப் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் இனி முப்படை வீரர்களைப் போல மருத்துவ சிகிச்சை உதவிகளைப் பெறமுடியும்" என்றார்.