நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியான௦௦௦௦௦௦ அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு நாளான இன்று, புது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா இதைக் கூறினார்.
"நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சுவடுகளை மறப்பதற்கு, அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனைதான் சரியான தீர்வு.
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை சரியான முறையில் ஒடுக்குவதற்குத் தகுந்த சட்டங்கள் அரசிடம் இல்லை. எனவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (பொடா) மீண்டும் அமல்படுத்த வேண்டும்" என்றார் மல்கோத்ரா.